ந்திர் பஜார்

ஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை அமைக்க பாஜக பணம் தேவை இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

நேற்று முன் தினம் கொல்கத்தாவில் நடந்த அமித்ஷாவின் சாலைப்பேரணியில் கடும் வன்முறை ஏற்பட்டது.   திருணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.   இந்த கலவரத்தில் பல பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தன.    வங்க அறிஞர் ஈஸ்வர சந்திர வித்யசாகர் சிலை உடைக்கப்பட்டது.

இன்று உத்திரப்பிரதேசத்தில் ஒரு தேர்தல் கூட்டத்தில் பிரதமர் மோடி  ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை இருந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்டமான ஐம்பொன் சிலை நிறுவபடும் என அறிவித்தார்.    இதற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் இன்று மந்திர் பஜாரில் நடந்த தேர்தல் பேரணியில், “பாஜக மேற்கு வங்கத்தின் 200 வருட பாரம்பரியத்தை உடைத்து நாசமாக்கி உள்ளது.   அந்த கட்சியை ஆதரிப்போரை சமுதாயம் ஒரு நாளும் ஏற்காது.  இது போல் சிலைகளை உடைப்பது பாஜகவின் வழக்கமாகி உள்ளது.   திரிபுராவிலும் சிலை உடைப்பை பாஜக நடத்தி உள்ளது.

மோடி மீண்டும் கொல்கத்தாவில் அந்த சிலையை நிறுவுவதாக வாக்களித்துள்ளார்.  நாங்கள் பாஜகவின் பணத்தில் சிலையை அமைக்க விரும்பவில்லை.   எங்களுக்கு பாஜகவின் பணம் தேவை இல்லை.  நாங்களே சிலை அமைப்போம்.  அதற்கான வசதி எங்களிடம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.