மேற்குவங்கத்தில் வங்காள மொழி படிப்பது கட்டாயம்!: மம்தா

--

மேற்கு வங்க மாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக வங்க மொழியை படிக்க வேண்டும் என்று நேற்று மம்தா பானர்ஜி உத்தவிட்டிருந்தார். இந்நிலையில் அது குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில்  கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “ இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு.  வேறுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் வலிமை “ என்றும் கூறியுள்ளார்.

மேலும் மேற்கு வங்க மாநிலம் அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்கிறோம்.  ஒரு மாநிலத்தின் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.  மேற்கு வங்க மாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் முதல் மொழியாக படிக்கலாம், ஆனால் மூன்று மொழிகளில் ஒரு மொழி கண்டிப்பாக வங்க மொழியாக இருக்க வேண்டும் .இந்த மும்மொழிக் கொள்கை மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் மாணவர்கள் பயிற்சி பெற வாய்ப்பாக இருக்கும்”  என்று தெரிவித்துள்ளார்.