தமிழ் மக்களுக்கு தலை வணங்குகிறேன்! கருணாநிதி நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் மம்தா பேச்சு

சென்னை:

மிழ் மக்களுக்கு தலை வணங்குகிறேன்; அவர்கள் உயிரை பற்றியும் கவலைப்படாமல் போராடுவார்கள் என்று கருணாநிதி முதலாண்டு நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறினார்.

முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் முதலாண்டு நினைவு நாளையொட்டி, முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் திருவுருவ சிலையை திறந்த வைத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

தொடக்கத்தில் தமிழில்  , அனைவருக்கும் வணக்கம். நான் நிறையே தமிழ் கற்க வேண்டும். அதற்காக அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்று பேசியவர், தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

அன்பு சகோதரர்களே சகோதரிகளே என்று கருணா நிதி அடிக்கடி உரைப்பார். கருணாநிதியின் போராட்ட உணர்விற்கும் ஜனநாயக வேட்கைக்கும் நான் தலை வணங்குகிறேன். அத்துடன் திராவிட தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். நான் கருணாநிதியை நினைக்கும் போதெல்லாம், அவரையும் முரசொலி மாறனையும் வீட்டில் வைத்து கைது செய்த புகைப்படம் தான் நினைவிற்கு வருகிறது.

நமது நாடு மிகப்பெரிய நாடு. இதில் அனைவரும் தங்களின் தாய்மொழியை மறக்கக் கூடாது.  கருணாநிதியை ஒரு சிறந்த தலைவர் என்றும், கூட்டாட்சிவாதத்திற்காக போராடியவர், ஏழை எளிய மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்காக போராடினார். மக்களுக்காக போராடிய தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர் என்று புகழ்ந்து பேசினார்.

மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பல  தலைவர்கள் மக்களுக்காக போராடினார்கள், அதுபோல நாமும் போராட முடியும், பயப்படவில்லை.  நாங்கள் எங்கள் உயிரைத் தியாகம் செய்யலாம், ஆனால் தமிழ் நிலம், வங்காள நிலம் அல்ல”.

ஒன்றுபட்ட இந்தியா இருக்க வேண்டுமானால் பிராந்திய மொழிகளுக்கும் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்,  ஃபரூக் அப்துல்லா இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இருக்க வேண்டும். ஆனால் அவர் தற்போது எப்படி இருக்கிறார்..? என்பதே நமக்கு தெரியவில்லை. மத்திய அரசு ஒரு மாநிலம் தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்றால் அந்த மாநிலத்தின் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். நாம் அனைவரும் முதலில் இந்தியன். அத்துடன் நமக்கு என்று தனியாக மாநில அடையாளம் உண்டு. அதை நாம் ஒரு போதும் அழியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.

பொதுக்கூட்ட மேடையில் மம்தாவுக்கு ஸ்டாலின் கருணாநிதி சிலை பரிசு வழங்கிய காட்சி

இளைய தலைமுறையினர் சவால்களை எதிர்த்து போராட வேண்டும். தங்களால் முடியும் என்று அனைத்தையும் சாதித்து காட்டவேண்டும். நல்ல பண்புகளையும், மனிதநேயத்தையும் பற்றி மட்டும் தான் கவலைப்பட வேண்டும். மற்றவை எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். தாய்நாடு நம்முடையது. நம்முடைய சித்தாந்தத்தின்படி அதை தனித்து விடமுடியாது.

தமிழ் மக்கள் எப்போதும் புலியை போன்றவர்கள். அவர்கள் எப்போதும் தைரியமானவர்கள். அத்துடன் நீங்கள் ஒரு நோக்கத்திற்காக சிறப்பாக போராடுவீர்கள். நீங்கள் உங்களின் உயிரை பற்றியும் கவலைப்படாமல் போராடுவீர்கள். ஏனென்றால் உங்களுக்கு மாநிலத்தின் நலன் தான் முக்கியமானதாக இருக்கும். ஆகவே தான் நான் உங்கள் முன் தலை வணங்குகிறேன்.

நான் மேற்கு வங்கத்தில் எப்போதும் ஜெய் பெங்கால் என்று கூறுவேன், தற்போது அத்துடன் ஜெய் தமிழ்நாடு என்று கூறுகிறேன். தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நன்றி.

இவ்வாறு மம்தா கூறினார்.