சிபிஐ விவகாரம் : மத்திய அரசு எதிராக மம்தா மீண்டும் போர்க்கொடி

கொல்கத்தா

சிபிஐ அதிகாரிகளை தடுத்த மேற்கு வங்க காவல் அதிகாரிகளுக்கு மத்திய விருதுக்கு பதிலாக மாநில அரசு விருதுகள் வழங்கும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு குறித்து சிபிஐ அமைப்பு விசாரணை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொல்கத்தா நகர காவல்துறை ஆணையர் ராஜிவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று கொல்கத்தா வந்தது. அவர்கள் ராஜிவ் குமர் வீட்டு வாசலில் மேற்கு வங்க காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐக்கு எதிராக ராஜிவ் குமார் இல்ல வாஅலில் தர்ணா போராட்டம் நடத்தினார். கிட்டத்தட்ட மூன்று நாட்கள்போராட்டத்துக்குப் பின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அவர் போராட்டத்தை கைவிட்டார். அப்போது அவர் சிபிஐ அமைப்பை மட்டுமின்றி மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கி பேட்டி அளித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகம் சிபிஐ அதிகாரிகளை தடுத்து கைது செய்த மற்றும் மம்தாவுடன் போராட்டத்தில் கலந்துக் கொண்ட காவல்துறை அதிகாரிகள்பட்டியலை கோறி உள்ளது. அந்த ஐந்து மூத்த காவல்துறை அதிகாரிகளும் மத்திய அரசின் விருதுகள் பெற்றவர்கள் எனவும் அவர்களது விருதுக்கலை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்ப பெற உள்ளதாகவும் தகவல்கள் வந்தன.

இதை ஒட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை மீண்டும் எதிர்க்க தொடங்கி உள்ளார். மம்தா பானர்ஜி, “மத்திய பாஜக அரசு எங்களை சிபிஐ கொண்டு மிரட்டுவதன் மூலம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது. அதில் ஒரு பகுதி மேற்கு வங்க காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதாகும்.

காவல்துறை அதிகாரிகள் மத்திய அரசின் கீழ் பணி ஆற்றுபவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் நாங்கள் அதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அந்த ஐந்து மூத்த காவல் அதிகாரிகளின் விருதுகளை மத்திய அரசு பறித்தால் நான் மாநிலத்தின் உயரிய விருதுகளை அவர்களுக்கு வழங்குவேன்.

அவர்கள் மாநில காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கல். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உண்டாகும். தேவையற்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை பாஜக அரசு நிறுத்த வேண்டும். சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் சம்பந்த்தப்பட்ட பாஜகவினர் மீது மத்திய அரசு என்ன ந்ட்வடிக்கை எடுத்தது? “ என கேள்விகள் எழுப்பி உள்ளார்.