கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 19ம் தேதியன்று பாஜகவுக்கு குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்ஆர்சி) தொடர்பான ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்புக்கு செல்லுமாறு சவால் விட்டார். . “பாஜகவுக்கு தைரியம் இருந்தால், அது திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் என்ஆர்சி குறித்து ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும்” என்று கொல்கத்தாவில் நடந்த பேரணியில் பானர்ஜி கூறினார்.

இப்போது தொடர்ச்சியாக நான்கு நாட்களாக CAA க்கு எதிராக மகத்தான பேரணிகளை நடத்தி வரும் பானர்ஜி, பாஜக தனது தொண்டர்களுக்காக “ஸ்கல் கேப்“ களை வாங்குவதாகவும், பின்னர் அவர்கள் பொது சொத்துக்களை அழிக்கும் போது அவற்றை அணிந்திருந்ததாகவும் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சண்டையாக மாற்ற பாஜக விரும்புகிறது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கெடுக்கும் வகையில் சொத்துக்களை அழிக்கும் போது அவற்றை அணிந்திருக்கும் அதன் தொண்டர்களுக்காக “ஸ்கல் கேப்“களை வாங்குகிறது.

வங்காள முதல்வர் பாஜக குறித்த இன்னொரு விமர்சனத்தை முன்வைத்தார்; “அவர்கள் கட்சி (பாஜக) நிறுவப்பட்டது 1980ல் ஆனால் இது 1970 ஆம் ஆண்டு முதலான எங்கள் குடியுரிமை ஆவணங்களைக் கேட்கிறது“,

CAA மற்றும் குடிமக்களின் முன்மொழியப்பட்ட தேசிய பதிவு (NRC) ஆகியவற்றின் எதிர்ப்பு மற்றும் அவை குறித்து ஆளும் பாஜக மீதான அவரது விமர்சனங்களிலும் பானர்ஜி கடுமையாகவே நடந்து கொண்டார். 18ம் தேதியன்று, அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சாடினார்; “உங்கள் வேலை நாட்டிற்குத் தீ வைப்பதல்ல, ஆனால் அதைத் அணைப்பதாகும். நீங்கள் நாட்டின் உள்துறை அமைச்சர். தயவுசெய்து நாட்டைக் கட்டுப்படுத்தி அமைதியைக் காத்திடுங்கள். ”

குடியுரிமைச் சட்டத்தில் பின்வாங்குவதில்லை என்றும், அதைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் ஒரு பாறை போல உறுதியானது என்றும் ஷா கூறிய ஒரு நாள் கழித்து, பானர்ஜி அவரை கேலி செய்தார், “நீங்கள் ஒரு பாறை என்றால், நாங்கள் எலிகள். நாங்கள் உங்களைக் கடிப்போம்.”