மோடியின் கருத்து குறித்து கருத்துச்சொல்ல விரும்பாத மம்தா..!

கொல்கத்தா: மின்விளக்குகளை 9 நிமிடங்களுக்கு அணைத்து, தீபம் உள்ளிட்ட விளக்குகளை பிரதமர் மோடி ஒளிரவைக்கச் சொன்ன விவகாரத்தில் தான் தலையிட விரும்பவில்லை என்றுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

நேற்று பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் “கொரோனா வைரஸை தோற்கடிக்க, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் டார்ச் போன்றவற்றை ஒளிரவிட்டு நம் வலிமையைக் காட்ட வேண்டும்” என்றார் பிரதமர்.

அவரின் இந்த அறிவிப்பு பலதரப்பிலும் நகைப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்கப்பட, அவர் கூறியதாவது, “பிரதமரின் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். இதை வைத்து நான் ஏன் அரசியல் செய்ய வேண்டும்? இதை ஏன் நீங்கள் அரசியலாக்க முயற்சிக்கிறீர்கள். தயவுசெய்து அதை செய்ய வேண்டாம்” என்றார்.

கார்ட்டூன் கேலரி