சோனியாவை இன்று சந்திக்கிறார் மம்தா!

டில்லி,

கில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசுகிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டில்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேச உள்ளதாக  கூறியுள்ளார்.

கடந்த வாரம் உடல்நலம் சரியில்லாமல் டில்லியில் உள்ள கங்காராம்  மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபடிய, மம்தா பானர்ஜியிடம் ஜனாதிபதி தேர்தல் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பேசிய சோனியா, இன்று (16ம் தேதி) தம்மை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில்  நிறைவு பெற உள்ள நிலையில், ஆளும் பாஜக வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சியினருடன் சோனியா காந்தி ஆலோசித்து வருகிறார்.

பொதுவேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார் அல்லது முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்தலாமா என்பது குறித்து மாற்று கட்சியினருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து மம்தாவுடனும் இதுகுறித்து பேசக்கூடும் என தெரிகிறது.

ஏற்கனவே பாரதிய ஜனதாவுக்கு எதிராக மாநிலக் கட்சிகள் கை கோர்க்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.