குடியுரிமைச் சட்டம் – பிரதமரும் மேற்குவங்க முதல்வரும் வார்த்தைப் போர்!

கொல்கத்தா: குடியுரிமைச் சட்டம் குறித்து பிரதமர் பேசியது சரியா? அல்லது நான் பேசியது சரியா? என்பதை மக்களே முடிவுசெய்யட்டும் என்றுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு குடியுரி‍மைச் சட்டம் குறித்துப் பேசிய மோடி, மேற்குவங்க முதல்வரை விமர்சித்தார்.

“மேற்குவங்க மாநிலத்தில் தொடர்ந்து ஊடுருவும் வங்கதேசத்தவரை தடுக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். அப்படியான நிலையில், இப்போதோ அவர் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கிறார். ஓட்டுவங்கி அரசியலுக்காகவே அவர் இதை செய்கிறார்” என்றார் மோடி.

ஆனால், இதற்கு பதிலடி கொடுத்த மம்தா கூறியதாவது; “தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து உள்துறை அமைச்சரான அமித்ஷா பேசியதற்கு எதிர்மாறாக பேசுகிறார் பிரதமர் மோடி. குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து நான் பேசியது மக்கள் முன்னிலையில். எனவே, யார் பேசியது சரி? என்பதை மக்களே முடிவுசெய்யட்டும்” என்றார் மம்தா பானர்ஜி.