“பொண்டாட்டி எதுக்கு.. நாய்க்குட்டி வளருங்க!” : ஆணாதிக்க கணவர்களுக்கு நடிகை பளார்!

“மனைவி என்பவள், தனக்கு அடிபணிந்து இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், திருமணம் செய்துகொள்வதற்கு பதிலாக நாய்க்குட்டியை எடுத்து வளர்க்கலாம்” என்று நடிகை மம்தா மோகன்தாஸ்  தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் டைரக்டர் விஜய்யும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.  இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.

a

இந்த நிலையில் இது  குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகை மம்தா மோகன்தாஸ்.

“எந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மனைவியான பிறகு குடும்பத்தை பார்க்க வேண்டும், கணவரை கவனிக்க வேண்டும் என்பன போன்ற அழுத்தங்கள் பெண்களுக்கு  வருகிறது.

கணவன்மார்கள், மனைவி என்பவள் தங்களுக்கு  உணவு சமைத்து, துணிகளை துவைத்து குடும்ப வேலைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதில் திருப்தி ஏற்பட்டால்தான் வேலைக்கு செல்ல அனுமதிக்கிறார்கள்.  பெண்களும் மனித ஜென்மம்தான், அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன என்பதை ஆணாதிக்க கவணர்கள் ஏற்பதில்லை” என்று ஆதங்கத்துடன்  கருத்து தெரிவித்தார் மம்மா மோகன்தாஸ்.

மேலும் அவர், , “ “மனைவி என்பவள்,அடிபணிந்தே கிடக்க வேண்டியவள் என்று கருதும் ஆணாதிக்க பேர்வழிகள் எதற்காக ஒரு மனுஷியை திருமணம் செய்துகொள்ள வேண்டும்? சொல்கிறதையெல்லாம் கேட்பது போல ஒரு , நாய்க்குட்டியை எடுத்து வளர்க்கலாமே” என்று  ஆத்திரத்துடன் சொல்லியிருக்கிறார்!

கார்ட்டூன் கேலரி