சித்தூர்:

து போதையில், கழுத்தில் கயிரை மாட்டிக்கொண்டு, தற்கொலை செய்துகொள்வதுபோல நண்பர்களிடம் விளையாட்டாக வீடியோ கால் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய, மெக்கானில் துரதிருஷ்டவசமாக கழுத்தில் கயிறு சுருக்கி உண்மையாகவே உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகன மெக்கானிக் கடையில் வேலை செய்து வரும் இளைஞர் ஒருவர், நன்றாக மது அருந்திவிட்டு, வீட்டிலுள்ள மின் விசிறியில்  நண்பர்களை ஏமாற்ற தற்கொலை செய்வது போல் வீடியோ எடுத்து லைவ்வாக காட்டியுள்ளார்.

தொடக்கத்தில் சும்மா கழுத்தில் கயிறுடன் கை பிடித்துக்கொண்டு விளையாடியவர், சிறிது நேரத்தில், கழுத்தில் மாட்டிய கயிறு,  கழுத்தை நெரித்தலாம் உயிரிந்தார்.  இதை வீடியோ கால் பார்த்துக்கொண்டிருந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரது வீட்டுக்கு வந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.. ஆனால், அதற்குள் அவரது உயிர் பிரிந்திருந்தது.

நண்பர்களை ஏமாற்ற நினைத்து இளைஞரின் விபரீத போலி தற்கொலை முயற்சி உண்மையாகவே நிகழ்ந்துள்ளது, அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.