டெல்லி:

மாட்டிறைச்சி கடத்தியதாக கூறி, பசு காவலர்கள் என்ற போர்வையில் அப்பாவி இளைஞரான வாகனம் ஓட்டுநர் ஒருவரை குண்டர்கள் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு  நொய்டாவின் தாத்ரியில் பாதுகாப்பு என்ற அமைப்பைச்சேர்ந்த கும்பல் , மாட்டிறைச்சி கடத்தி சென்றதாக நினைத்து ஒருரை அடித்தே கொலை செய்தது. இது நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது டெல்லிக்கு அருகே உள்ள குர்கான் பகுதியில் இருந்து சென்ற டிரக்கில் மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக கூறி, அதை 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்திச் சென்று, அந்த வாகன ஓட்டுனரான இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளது. பின்னர், அந்த ஓட்டுநரை பாட்ஷாபூர் என்ற கிராமத்துக்கு அழைத்துச் சென்ற குண்டர்கள் அங்கு வைத்தும் தங்களது தாக்குதலை தொடர்ந்திருக்கிறார்கள்

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தாக்குதல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போலிஸாரோ, பொதுமக்களை அவர்களை தடுக்க முன்வரவில்லை என்பது வேதனைக்குரியது.

இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. இதன் பின்னர் படுகாயமடைந்த லுக்மேனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து வீடியோ ஆதாரங்கள் இருந்தும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.