நாயின் பெயரை ரேஷன் கார்டில் இணைத்து பொருட்கள் வாங்கிய முதியவர்

ந்தூர்

னது வளர்ப்பு நாயின் பெயரை ரேஷன் கார்டில் சேர்த்த் முதியவர் நாயின் பெயரில் ஆண்டுக்கு 60 கிலோ உணவு தானியம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் இந்தூர் அருகில் உள்ள ஒரு சிற்றூரில் வசித்து வரும் 75 வயது முதியவர் நரசிங்க் போதார்.   இவர் தனது ரேஷன் கார்டில் தனது மனைவி மற்றும் மகன் ராஜு என மூவரின் பெயரை சேர்த்துள்ளார்   அவர் தனது மகனுக்காக ஆண்டுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட 60 கிலோ உணவு தானியங்களை பெற்றுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் தற்போது ரேஷன் பொருட்களுக்கு ஆதார் அட்டை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.     நேற்று முன் தினம் ரேஷன் வாங்க சென்ற போதார் தன்னுடைய ஆதார் அட்டையையும் தனது மனைவியின் ஆதார் அட்டையையும் அளித்துள்ளார்.   அப்போது அங்கு பரிசோதனை செய்துக் கொண்டிருந்த விற்பனையாளர் ராஜுவின் ஆதார் அட்டையை கேட்டுள்ளார்.

அப்போது போதார் அது தாம் வளர்க்கும் நாய் எனவும் அந்த நாயை மகன் போல வளர்ப்பதால் ரேஷன் கார்டில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   அதிர்ச்சி அடைந்த விற்பனையாளர் இது குறித்து மாவட்ட உணவுத்துறை அதிகாரி ஆனந்த் கோலேவுக்கு தகவல் அளித்துள்ளார்.   அவர் விசாரணை செய்து போதாரின் ரேஷன் கார்டை ரத்து செய்துள்ளார்.   மேலும் அந்த பகுதியில் தற்போது ரேஷன் அதிகாரிகள் வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.