குஜராத் : மூன்று சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்தவர் கைது

டோதரா

குஜராத்தில் வடோதரா நகரில் மூன்று சிறுமிக்ளிடம் பாலியல் அத்துமீறல் செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாட்டில் பல இடங்களிலும் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் நடப்பது அதிகரித்து வருகிறது.

இதையொட்டி அரசு போக்சோ சட்டத்தை இயற்றி இதற்கான தண்டனையை கடுமையாக்கி உள்ளது.

ஆயினும் இந்த கொடுமை தொடர்ந்து வருகிறது.

குழந்தைகளுக்கு வகுப்பறையில் தவறான தொடுதல் பற்றி கற்பிக்கப்படுகிறது.

அவ்வாறு வடோதராவில் ஒரு அசிரியை தனது மாணவிக்ளுக்கு தவறான தொடுதல் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

திடீரென மாணவிகளில் ஒருவர் அழுதுக் கொண்டே தன்னிடம் ஒருவர் அப்படி நடப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆசிரியை அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

காவல்துறையினர் அந்த நபரை ஐது செய்து விசாரணை செய்து வருகின்றன்ர்.

அவர் இதைப் போல் மூன்று சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணை மேலும் தொடர்ந்து நடக்கிறது.