ராஜஸ்தானில் பயங்கரம்: மாடு கடத்துபவர் என்று அப்பாவி அடித்து கொலை

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில், மாடு கடத்தல்காரர் என்று சந்தேகப்பட்டு, அந்த பகுதி மக்களால் அப்பாவி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் ராஜஸ்தானில் உள்ள அல்வார் என்ற பகுதியில் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே உள்ள  ராம்கர் கிராம பகுதியில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர். இதைக்கண்ட அந்தபகுதி மக்கள், அவர்கள் இருவரும் மாட்டை கடத்த வந்தவர்கள் என்று சந்தேகப்பட்டு அவர்கள் மீது சரமாரியாத தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் அக்பர் கான் என்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில்தான் ‘மாட்டை காப்பதற்காக கூறி யாரும்  சட்டத்தை கையில் எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இதுபோன்றவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தானில் மாட்டை கடத்தியதாக ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,

கொண்டு தாக்குதல் நடத்துபவர்களை ஒடுக்கிட வேண்டும்’ என்று கூறியது. இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும்,  சட்ட ஒழுங்கை மாநில அரசுதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மத்திய அரசு உதவி செய்யும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

You may have missed