பழைய காதலியை பழிவாங்க முகநூலில் பலான படத்தை பதிவிட்ட காதலன்

மும்பை

னது பழைய காதலியை பழி வாங்க ஒர் வாலிபர் காதலியின் பெயரில் 8  முகநூல் கணக்குகள் தொடங்கி அதில் ஆபாச படங்களை பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பூனே நகரைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் வாலிபரும் காதலித்து வந்தனர்.    அந்த வாலிபரின்  நடத்தைகள் பிடிக்காததால் அந்தப் பெண் அவரை வெறுக்கத் தொடங்கினார்.   இருவருக்கும் இடையில் தகராறு முற்றவே,  அவர் புனே நகரை விட்டு மும்பையில் காட்கோபர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசிக்க வந்துள்ளார்.    அதன் பிறகு அவர் மும்பையில் பணி தேடிக் கிடைத்த பின் அங்கேயே வசிக்கத் தொடங்கி உள்ளார்.

அந்தப் பெண்ணின் சகோதரர் எதேச்சையாக தனது சகோதரியின் பெயரில் சில முகநூல் கணக்குகள் உள்ளதையும் அதில் ஆபாச படங்கள் பதிவிட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.   அந்தப் பெண் அந்தக் கணக்குகளில் தனது புகைப்படம் நடிகை சன்னி லியோனின் படத்துடன் மார்பிங் செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்தார்.

அத்துடன் ஓரிரு படங்களில் அவரது முன்னாள் காதலன் தனது முகத்தை சன்னி லியோனுடன் இருந்த ஆணின் புகைப்படத்தில் சேர்ந்துள்ளதை கவனித்தார்.    உடனடியாக அவர் மும்பை காட்கோபர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.   அவர்கள் புகாரை பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்ய சென்ற போது அவர் தலைமறைவாகி விட்டார்.

கடந்த ஜூலை முதல் அவரை தேடி வந்த காவல்துறையின் அவரை புனே நகரில் புற நகர் பகுதியில் நேற்று கண்டு பிடித்து கைது செய்துள்ளனர்.   தனது காதலியை பழி வாங்க அவ்வாறு செய்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.   தனது காதலியின் போலி கணக்குகளில் இருந்து காதலியின் உறவினர்களுக்கு நட்பு அழைப்பை இளைஞர் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.