14 பேரை வேட்டையாடி கொன்ற பெண் புலி ‘அவ்னி’ சுட்டுக்கொலை

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 14 மனிதர்களை வேட்டையாடிய பெண்புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். பலரது உயிருக்கு ஆபத்தை விளைக்கும் புலியை சுட்டுக் கொல்ல மாநில அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

tigress

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 14 மனிதர்களை கொன்று தின்ற பெண் புலி தான் அவ்னி. யவ்த்மால் வனப்பகுதியில் சுதந்திரமாக சுற்றுத்திரிந்த இந்த பெண்புலி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. பொதுமக்களை பெண்புலி தொடர்ந்து தாக்கியதை அடுத்து, அதனை சுட்டுக் கொல்ல மாஹாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து புலியைக் கொல்லக்கூடாது என வன உயிரின ஆர்வலர்கள் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் 14பேரை தாக்கிய அந்த புலியால் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதான் அதனை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு யவத்மால் வனப்பகுதியில் வலம்வந்த வனத்துறையினர் அந்தப் புலியை சுட்டுக்கொன்றனர். நாக்பூரில் உள்ள கோரேவாடா காப்பகத்தில் அந்தப் புலியின் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.