மாடியில் இருந்து சிறுமி மேல் விழுந்த இளைஞர் : சிறுமி கவலைக்கிடம்

சென்னை

ரண்டாவது மாடியில் இருந்து ஒரு இளைஞர் நான்கு வயது சிறுமி மேல் விழுந்ததில் சிறுமி கவலைக்கிடமாக உள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் வசிப்பவர்கள் ஸ்ரீதார் மற்றும் அவர் மனைவி யமுனா தேவி.   அவர்களுக்கு யாஷிகா (வயது 7) மற்றும் தன்யாஸ்ரீ (வயது 4) என இருமகள்கள் உள்ளனர்.     கடந்த ஞாயிற்றுக்கிழமை  இரவு சுமார் 8.30 மணி அளவில் தன்யாஸ்ரீயும் அவர் தாத்தா அருணகிரியும்  அருகில் உள்ள மளிகைக் கடைக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் கடைக்குள் செல்லும் போது அதே கட்டிடத்தில் வசிக்கும் சிவா (வயது 30) என்னும் இளைஞர் இரண்டாம் மாடியில் இருந்து சிறுமி தன்யஸ்ரீ மீது விழுந்துள்ளார்.   அவர் அப்போது போதையில் இருந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.   சுயநினைவை இழந்த சிறுமியை அருகில் உள்ள அப்போலோ மருத்தவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.   அதன் பிறகு அந்த மருத்துவமனையில் இருந்து கிரீம்ஸ் ரோட்டில் உள்ள பிரதான அப்போலோ மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

சிறுமியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அவருக்கு மூளையில் வீக்கமும் முதுகுத்தண்டு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.    அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள தன்யஸ்ரீ குறித்து இன்னும் 48 மணி நேரம் கழித்துதன் எதுவும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இளைஞர் சிவா முழுவதும் அந்தச் சிறுமி மேல் விழுந்ததால் இடது காலில் எலும்பு முறிவு தவிர வேறு எந்த காயமும் ஏற்படவில்லை.     அவர்  மீது தன்யஸ்ரீயின் தந்தை அளித்துள்ள புகாரின் பேரில் வ்ழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.