பறக்கும் ரெயிலில் மனநிலை குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

சென்னை

சென்னையில் வேளச்சேரி – கடற்கரை தடத்தில் செல்லும் மின்சார ரெயிலில் மனநிலை பிறழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது.

சென்னையில் கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில் பெரும்பாலான தூரத்தில் மேம்பாலத்தில் செல்கிறது.   இதனால் இந்த ரெயில் பறக்கும் ரெயில் என அழைக்கப்படுகிறது.

இந்த பறக்கும் ரெயிலில் நேற்று இரவு வேளச்சேரியில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் ஒரு மனநலம் குன்றிய பெண் பயணம் செய்துள்ளார்.   அப்போது சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் சத்யராஜ் என்னும் 25 வயது இளைஞர் ஏறி உள்ளார்.   தனியாக அமர்ந்திருந்த அந்த மனநலம் குன்றிய பெண்ணுக்கு அவ்ர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்தப் பெண் பயங்கரமாக அலறவே சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை காவலர் சிவாஜி என்பவர் அந்தப் பென்ணை காப்பாற்றி உள்ளார்.  சிவாஜி அதே ரெயிலில் அடுத்த பெட்டியில் பயணம் செய்துக் கொண்டு இருந்துள்ளார்.

சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசார் சத்யராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   அந்த மனநலம் குன்றிய பெண்  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

You may have missed