சன்னி லியோனாவால் டெல்லி வாலிபருக்கு வந்த சோதனை…!

திரைப்படத்தில் வரும் சன்னிலியோனின் போன் நம்பருக்கு கால் செய்து அவரது ரசிகர்கள் டார்ச்சர் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அர்ஜூன் பாட்டியாலா” என்ற திரைப்படத்தில் சன்னி லியோன் கேமியோ ரோலில் நடித்திருந்ததாகவும். சன்னி லியோன் நடித்த காட்சியில் அவர் படத்தின் கதாநாயகன் தில்ஜித்திடம் ஒரு போன் நம்பரை கொடுத்ததாகவும் அந்த போன் நம்பர் சன்னிலியோனின் உண்மையான நம்பர் என நினைத்து அவரது ரசிகர்கள் கால் செய்தது வருவதாக அந்த எண்ணின் உரிமையாளர் புனித் அகர்வால் போலீசில் அந்த திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்துள்ளார்.

மேலும் திரைப்படத்தில் தனது செல்போன் எண்ணை தனது அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக கோர்ட்டை நாடவுள்ளதாகவும் புனித் தெரிவித்துள்ளார்.