Random image

கர்ப்பிணி மனைவி முன் கணவர் ஆணவக் கொலை

தராபாத்

சாதி அந்தஸ்து தாண்டி திருமணம் செய்துக்கொண்ட பெண்ணின் தந்தை மருமகனை ஆள் வைத்து ஆணவக் கொலை செய்துள்ளார்.

தெலுங்கானா மாவட்டம் நலகொண்டா மாவட்டத்டில் உள்ள மிரியாலகுடா என்னும் ஊரில் பிரணாய் நாயக் என்னும் 30 வயது இளைஞர் வசித்து வந்தார்.   அதே ஊரில் வசிக்கும் அமிர்த வர்ஷினி என்னும் 25 வயது இளம்பெண்ணுக்கும் இவருக்கும் சிறுவயது முதல் நட்பு இருந்தது.  அந்த நட்பு காதலாக மலர்ந்தது.   பணக்கார வீட்டு பெண்ணான அமிர்த வர்ஷினியின் தந்தை இந்த காதலை எதிர்த்தார்.

அதனால் கடந்த 6 மாதம் முன்பு வீட்டை விட்டு ஓடி வந்த அமிர்த வர்ஷினி காதலனை பதிவு திருமணம் செய்துக் கொண்டார்.    முதலில் இந்த திருமணத்தை எதிர்த்த பிரணாய்  நாயக்கின் பெற்றோர் அமிர்த வர்ஷினி தற்போது கருவுற்று இருப்பதால் ஏற்றுக் கொண்டனர்.    ஆனால் அமிர்தவர்ஷினியின் தந்தை மாருதி ராவ் இந்த திருமணத்தை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார்.

நேற்று முன் தினம் அமிர்த வர்ஷினியை மருத்துவ பரிசோதனைக்காக பிரணாய் அழைத்துச் சென்றுள்ளார்.   அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் நடு ரோட்டில் பிரணாய் நாயக்கை பல இடங்களில் அரிவாளால் வெட்டி உள்ளார்.    அவர் அங்கேயே மரணம் அடைந்தார்.   அமிர்தவர்ஷினி கதறிய்படி நின்றுக் கொண்டிருந்துள்ளார்.

பிரணாய் நாயக்கின் தந்தை, “இந்த கொலைக்கு மாருதிராவ் தான் காரணம்.   அந்தஸ்தில் குறைந்த என் மகன் மீது அவர் கடும் கோபத்தில் இருந்தார்.  அதனால் அவர் ரவுடிகளை நியமித்து என் மகனை கொலை செய்துள்ளார்” என காவல்துறையிடம்  தெரிவித்துள்ளார்.   ஏற்கனவே பிரணாய் நாயக்கை பல முறை திருமணத்துக்கு பிறகு மிரட்டியதாக தெரிய வந்துள்ளது.

கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து கொலையாளிகயை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   அதிர்ச்சியால் மயக்கம் அடைந்த அமிர்த வர்ஷினி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளனர்.   தனது கணவர் கொலைக்கு தனது தந்தையும் சித்தப்பாவும் காரணம் என கண்ணீருடன் கூறி உள்ளார்.