இலங்கை : காட்டு யானை மிதித்து வாலிபர் சாவு

யாழ்ப்பாணம்

லங்கை யாலா தேசிய பூங்காவில் ஒரு காட்டு யானை மிதித்து வாலிபர் மரணம் அடைந்துள்ளார்.

சமீபத்தில்  தமிழ்நாட்டில் மசின குடியில் ஒரு காட்டு யானையின் பக்கத்தில் சென்ற ஒரு வாலிபரை அந்த யானை மிதித்துக் கொன்றதாக செய்திகள் வெளியாகின.   அத்துடன் விடியோ பதிவு ஒன்றும் வெளியாகியது.

அந்த வீடியோ பதிவில் ஒரு யானை தனியாக நின்ருக் கொண்டிருக்கிறது.  அதன் அருகே ஒரு இளைஞர் வேகமாக செல்கிறார்.   அவரைக் கண்ட அந்த யானை அவரிடம் வேகமாக ஓடி வருகிறது.  அவரை மிதித்துக் கொல்கிறது.    அதன் பிறகு அந்த யானையை மற்றவர்கள் துரத்துகின்றனர்.

ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின் படி அந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடை பெறவில்லை என தெரிய வந்துள்ளது.  இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள யாலா தேசிய பூங்காவில் இந்நிகழ்வு நடந்துள்ளது.