மனைவி, மூன்று மகள்களைக் கொன்று ப்ரிட்ஜில் அடைத்த கணவன்! துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தானும் தற்கொலை!

னைவி மூன்று மகள்கள் உட்பட நான்கு பேரை கொன்ற நபர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தை அதிரவைத்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் அலகாபாத்திலுள்ள துமகன்ஞ்  பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குஷ்வா. இவரது வீட்டில் நேற்று இரவு குடும்பத்தாருக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளவும் செய்திருக்கிறார்கள். இது வழக்கமாக நடப்பது என்பதால் அக்கம்பக்கத்தினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மறுநாள் காலையான இன்று மனோஜ் வீடு விடிந்து நெடுநேரமாகியும் திறக்கப்படவில்லை.  இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த காவலர்கள் பூட்டை உடைத்து வீட்டைத் திறந்தது பார்த்தனர். அங்கு வீட்டின் முன் ஹாலில் இருந்த மின்விசிறியில் மனோஜ் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

மேலும் காவலர்கள் வீட்டை ஆய்வு செய்தபோது, மனோஜின் மனைவி கொலை செய்யப்பட்டு  ஃப்ரிட்ஜிலும், அவரது மூன்று மகள்கள் கொலை செய்யப்பட்டு சூட்கேசிலும்  வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால்தான் இந்த கொலை நடந்திருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரிவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.