யானையை தாலாட்டு பாடி உறங்க வைக்கும் பாகன்

கேரளா மாநிலம் திரிசூா் பகுதியில் பாகன் ஒருவா் தனது யானையை தாலாட்டு பாடி உறங்க வைக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. யானைக்காக தாலாட்டு பாடும் பாகனை விலங்குகள் நல ஆா்வலா்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனா்.

elephant

கேரளா மாநிலம் திரிசூா் பகுதியைச் சோ்ந்தவா் மவுத் ஸ்ரீ குமாா். இவர் யானைகளை பராமரிக்கும் தொழில் செய்து வருகிறாா். பொதுவாக பாகன்கள் யானைகளிடத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் காட்சிகளை நாம் அதிகம் பாா்த்திருப்போம். ஆனால் மவுத் ஸ்ரீ குமாா் அது போன்று அல்லாமல் யானைகளிடத்தில் மிகவும் பரிவுடன் நடந்து கொள்கிறாா் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

மேலும், தனக்கு சொந்தமான பஸ்டியான் வினய் சுந்தா் என்ற யானையை குமார் தினமும் தாலாட்டு பாடி தான் உறங்க வைக்கிறாா். நாள் முழுவதும் பணியாற்றி விட்டு களைப்புடன் காணப்படும் யானை மவுத் ஸ்ரீ குமாரின் தாலாட்டை கேட்ட பின்னா் தான் உறங்குகின்றது.

இந்நிலையில் யானைக்கு குமார் தாலாட்டு பாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மவுத் ஸ்ரீ குமாா் ஒரு மெல்லிசை பாடகர் என்பதும், அவர் உள்ளூா் தொலைக்காட்சிகள் பலவற்றிலும் பங்கேற்று பாடியுள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.