தெலுங்கானா மாணவனைக் கொன்ற அமெரிக்க கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் படித்துவந்த தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவரை சுட்டுக்கொன்ற அமெரிக்க கொள்ளையனை அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சரத் கொப்பு (வயது26). கம்யூட்டர் என்ஜினீயரான இவர் அமெரிக்கா. கன்சாஸில் உள்ள மிசெளரி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்துவந்தார்.

சரத்

கடந்த 6-ம் தேதி கன்சாஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு திடீரென்று துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் சரத் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்  இறந்தார். அவர் உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்தன கொள்ளையடிப்பதற்காக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக கன்சாஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்

அதோடு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீடியோ காட்சியை வெளியிட்டு, குற்றவாளியை பற்றிய தகவல் தெரிவித்தால் பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்படும் என்று அறிவித்தனர்.

கொள்ளையன்

பிறகு சரத்தின் உடல் ஐதராபாத் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது

இந்நிலையில் அந்தக் கொள்ளையனை பிடிக்க கன்சாஸ் காவலர்கள், தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அக்கொள்ளையன் ஒரு காரில் சென்றுகொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவலர்கள் அவனை பின் தொடர்ந்தனர். ஒரு உணவகம் அருகே காரை நிறுத்திய அவனை காவலர்கள் பிடிக்க முயன்றபோது, துப்பாக்கியால் காவலர்களை   சுட்டான். இதில் மூன்று காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் காவலர்கள் திரும்பிச்சுட்டனர். கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் கொள்ளையன் மரணமடைந்தான். அவனது பெயரை காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.

 

 

You may have missed