ஆப்பிளுக்கு பதிலாக கரடிக்கு ஐபோனை வீசிய இளைஞர்… வைரல் வீடியோ

ன விலங்கு சரணாயத்தை சுற்றிப்பார்த்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த கரடிகளுக்கு ஆப்பிள் மற்றும் கேரட் போன்ற உணவு பொருட்களை தூக்கி போடும்போது,  தனது கையில் இருந்த ஆப்பிள் ஐபோனை தவறுதலாக தூக்கி எறிந்து விட்டார்.

ஆனால், அங்கிருந்த கரடிகள், அந்த ஐபோனை தீவிரமாக ஆராய்ந்து வரும் காட்சி  வைரலாகி வருகிறது.

சீனாவில் உள்ள யான்செங் வனவிலங்கு பூங்காவில் அமைந்திருக்கும் கரடிகளுக்கு உணவாக தான் வைத்திருந்த ஆப்பிள்களை கொடுக்க முயன்ற நபர் ஒருவர், தன்னை அறியாமல் தனது ஐ போனை தூக்கிப் போட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இரண்டு கரடிகள் அந்த ஐபோனை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது..  ஒரு கரடி அந்த ஐபோனை வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு மறைவிடத்தை நோக்கி செல்கிறது… இந்த காட்சி குறித்த வீடியோ வைரலாகி வருகிறது…

வெகு நேரத்திற்கு பிறகு அந்த பூங்கா அதிகாரிகள் ஐபோனை மீட்டதாகவும், ஆனால், போன் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.