பசுக்களை தேடியவரை மரத்தில் கட்டி வைத்து கை துண்டிப்பு

ராய்சென், மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேசத்தில் பசுக்களை காணவிலை என தேடிச் சென்றவரை ஒரு குடும்பம் மரத்தில் கட்டி வைத்து கையை வெட்டி துண்டித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் என்னும் கிராமப்பகுதியில் பிரேம் நாராயண் சாகு என்னும் 35 வயது இளைஞர் வசித்து வருகிறார்.    இவர் பசுக்கள் வளர்த்து வந்தார்.   அவை காணாமல் போனதால் அதை தேடிச் சென்றுள்ளார்.   அப்போது அவர் தன்னுடன் ஒரு வாளை எடுத்துச் சென்றுள்ளார்.

அதே பகுதியில் உள்ள சத்து யாதவ் என்பவரின் பண்ணையில் சென்று இவர் தேடும் போது சத்துவின் குடும்பத்துடன் இவருக்கு வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.  தகராறு முற்றி கைகலப்பில்முடிவடைந்தது.    கைகலப்பின் போது சத்துவும் அவர் குடும்பத்தினரும் இணைந்து சாகுவை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

அதே நேரத்தில் அவருடைய வலது கையை வாளால் துண்டித்துள்ளனர்.   இடது கையிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது.    அப்போது அங்கு கூடியிருந்த கிராமத்தினர் யாரும் சந்துவை காப்பாற்ற முன் வரவில்லை.  மாறாக அவர் கதறுவதை வீடியோ எடுத்துள்ளனர்.

சாகுவின் கைகள் வெட்டப்பட்ட பின்னர் அங்கு வந்த காவல்துறையினர்  அவரை மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.    இந்த தாக்குதலில் ஈடுபட்ட சத்துவின் குடும்பத்தினர் ஐவரில் இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.   தப்பி ஓடிய மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.    தப்பியவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.