ஆபாச படமெடுத்து பெண்ணை மிரட்டியவர் கைது

சென்னை

யக்க மருந்து கொடுத்து பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்து உள்ளது சேலையூர். அங்குள்ள கற்பகா நகர் 3ஆம் தெருவில் ஒரு தனியார் கன்சல்டிங் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தை நடத்தி வருபவர் ராஜசுந்தர் கார்த்திக் என்பவர். இந்த நிறுவனம் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வாங்கித் தரும் பணியையும், வேலை வாய்ப்பு பயிற்சியையும் அளித்து வந்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ஒரு 21 வயது இளம்பெண் இந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அந்தப் பெண் பி இ படித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு ராஜசுந்தர் அந்தப் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை அறியாத அந்தப் பெண்ணும் அதை குடித்துள்ளார்.

குடித்ததும் மயக்கமான அந்தப் பெண்ணை ராஜசுந்தர் ஆபாசமாக புகைப்ப்டம் எடுத்துள்ளார்4. அதன் பிரகு அந்தப் படத்தை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரு. 1 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அந்தப் பெண் சேலையூர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரை ஒட்டி சேலையூர் காவல் நிலைய காவல்துறையினர் ராஜாசுந்த்ரை கைது செய்துள்ளனர். அவர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கிழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.