Man vs Wild நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஆகஸ்டு  12-ம் தேதி இரவு 9 மணிக்கு உலகம் முழுவதும் 180 நாடுகளில்  டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பா கிறது.

உலகம் முழுவதும் அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி Man vs Wild . இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டு, பல்வேறு காடு மேடுகளில் அலைந்து திரிந்து சாகங்களை நிகழ்த்தி வருபவர்.  பியர் கிரில்ஸ். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில், Man vs Wild நிகழ்ச்சியில் தன்னுடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் 18ந்தேதி வெளியாகும் என்று என்று பியர் கிரில்ஸ் தெரிவித்து உள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டு, அதில், இந்திய பிரதமரின் மற்றொரு முகம் தெரிய வரும் என்று தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு Man vs Wild நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ் உடன்  அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசியமாக பயணம் மேற்கொண்ட விவகாரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது பிரதமர் மோடி பங்குபெற்ற நிகழ்வு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில்,  இந்திய வனப்பகுதிக்குள் பியர் கிரில்ஸ் உடன் மோடி சென்ற நிகழ்வுகள் வெளியாக உள்ளது.

இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில், ஆகஸ்ட் 12 இரவு 9 மணிக்கு 180 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ளது.