விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறல் : இளைஞர் கைது

மும்பை

விமானத்தில் தனது பேண்ட் ஜிப்பை திறந்து வைத்துக்கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணை கண்ட இடங்களிலும் தொட்டு அத்து மீறிய இளைஞர் கைது

பங்களூரு – மும்பை இடையே பறந்த விமானத்தில் பயணம் செய்தார் சபீன் ஹம்ஜா என்னும் இளைஞர்.  இவர் அருகில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தார்.   பயணத்தில் அசந்து தூங்கி விட்டார் அந்தப் பெண்.  திடீரென தன்னை யாரோ தொடக்கூடாத இடங்களில் தொடுவதை உணர்ந்து விழிப்பு வந்தது.   அது வேறு யாருமில்லை ஹம்ஜா தான் என உணர்ந்த அந்தப் பெண் உடனடியாக கூச்சல் இட்டார்.   அனைவரும் கூடும் போது அவசர அவசரமாக தனது பேன் ஜிப்பை அந்த இளைஞர் மூடுவதை அனைவரும் கண்டனர்.

விமானம் மும்பையில் தரை இறங்கியதும் ஹம்ஜாவை ஏர்போர்ட் போலிசாரிடம் விமானக் குழு ஒப்படைத்தனர்.   அவர் மேல் பாலியல் வன்கொடுமை, பெண்களை பலாத்காரம் செய்ய முயலுதல் ஆகிய குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் பெயரும்,  அவர் வந்த ஏர்லைன்ஸ் பெயரும் வெளியே சொல்லப்படவில்லை.

இது போல இரண்டு வாரங்களுக்கு முன்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் ஹைதராபாத் – டில்லி விமானத்தில் ஒரு இளைஞர் தன் இருக்கையில் சுய இன்பம் அனுபவித்தது கண்டுபிடிக்கப்பட்டது

ரமேஷ் சந்த் என்னும் அந்த இளைஞர் தன் பக்கத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதையும் பொருட்படுத்தாமல்  இந்தக் காரியத்தில் ஈடுபட்டார்.  அருகிலிருந்த அந்தப் பெண்ணும், மற்ற பயணிகளும் கொடுத்த புகாரின் பேரில் அந்தப் பெண் வேறு இருக்கைக்கு மாற்றப்பட்டார்.  ரமேஷை வாஷ்ரூம் சென்று சுத்தம் செய்துக் கொண்டு வரக் சொல்லப்பட்டது.    ரமேஷ் டில்லியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

விமானங்களில் இது போன்ற செய்கைகள் அதிகமாகி வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.   ஆனால் இது இப்போது ஆரம்பித்தது இல்லை.   கேரளா அமைச்சர் ஜோசப் விமானத்தில் தன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சேட்டை செய்து அது பெரிய பரப்பரப்பானதும்,  பல விமான பணிப்பெண்கள் தங்களிடம் ஆண் பயணிகள் தவறாக நடப்பதாக புகார் எழுப்புவதும்,  ஏற்கனவே நடப்பவை தான்