வுகாத்தி

ல்லூரி மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அவருடைய ஆண் நண்பருக்கு கவுகாத்தி நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி உள்ளது.

அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியை சேர்ண்ட ஸ்வேதா அகர்வால் கே சி தாஸ் கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டில் படித்து வந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த கோவிந்த் சிங்கால் என்னும் இளைஞருக்கும் உண்டான நட்பு காதலாக மாறி உள்ளது. இடையில் இருவருக்கும்  இடையே சற்று மனத்தாங்கல் உண்டானதால் கோவிந்த் தனது காதலியை ஒதுக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் துயருற்ற ஸ்வேதா கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  4 ஆம்தேதி அன்று கோவிந்த் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே கோவிந்த் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்ஹ்டி உள்ளார். அதை கோவிந்த் மறுக்கவே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோவிந்த் தனது காதலி ஸ்னேகாவை கடுமையாகத் தாக்கியதில் அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார்.

கோவிந்த் சிங்கால் அதைக் கண்டு அதிர்ந்து  போனார். ஸ்வேதா மரணம் அடைந்ததாகக் கருதிய அவர் அதைத் தற்கொலையாகக் காட்ட பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி உள்ளார். அவருடைய இந்த செய்கைக்கும் கோவிந்தின் தாயும் சகோதரியும் உதவி செய்துள்ளனர். காவல்துறை விசாரணையில் ஸ்வேதா தற்கொலை செய்துக் கொள்ளவில்லை எனவும் எரித்துக் கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வந்ததால் கோவிந்த் கைது செய்யப்பட்டார்.

கவுகாத்தி நீதிமன்றத்தில் இரண்டாண்டுகளாக நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தனது காதலியைக் கொடூரமாக தீ வைத்துக்  கொன்ற கோவிந்த் சிங்காலுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவருக்கு உதவி செய்த தாய் மற்றும் சகோதரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.