புனே : தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டவர் படுகொலை

புனே

ரு கட்டுமானம் குறித்த விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட இளைஞர் புனேவில் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

புனே நகரின் புறநகர் பகுதியான் அவுந்த் என்னும் இடத்தில் வசித்து வரும் 27 வயது இளைஞர் ரோகித் அசோக் ஜுனாவானே பால் வியாபாரம் செய்து வருபவர் ஆவார். இவருக்கு சமூகப் பணிகளில் மிகவும் ஆர்வம் உண்டு. அதே ஊரைச் சேர்ந்த செல்வந்தரான கஜேந்திரா என்பவர் பல குற்றச் செயல்களை செய்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது கஜேந்திரா ஒரு மாபெரும் கட்டுமானப் பணியை செய்து வருகிறார். அதில் அதிகம் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். அதை ஒட்டி ரோகித் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளிக்க முடிவு செய்தார். இது கஜேந்திராவுக்கு பிடிக்கவில்லை.

சுமார் 4 தினங்களுக்கு முன்பு கஜேந்திராவும் அவர் ஆட்களும் ரோகித் தை சந்தித்து மிரட்டி உள்ளனர். ஆனால் அவர் மிரட்டலுக்கு பயப்படாமல் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனுவை கொடுத்துள்ளார். இந்நிலையில் கஜேந்திராவின் ஆட்கள் அதிகாலையில் ரோகித்தை சுற்றி வளத்து அரிவாளால் தாக்கி உள்ளனர்.

அந்த தாக்குதலில் ரோகித் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.