Random image

ஓசூர் : மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மகளுக்கு பாலியல் கொடுத்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

ராஜேஷ் சர்மா என்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.   சுமார் 45 வயதான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  ஓசூரில் பணி புரியும் இவருடன் இவர் மனைவி, 4 மகன்கள், மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.  இவருடைய மகள்களில் ஒருவருக்கு 15 வயதாகிறது.

ராஜேஷ் சர்மா தனது 15 வயது மகளுக்கு தினந்தோறும் இரவில்  பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.   இதை அந்த சிறுமி தனிமையில் எதிர்த்தும் அவர் கேட்கவில்ல.    இதை ஒட்டி அந்த சிறுமி மிகவும் மனவேதனை அடைந்துள்ளார்.  கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் வீட்டை விட்டு வெளியேறி கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பெற்ற தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கொடுமையைக் கேட்டு அதிர்ந்த அலுவலகத்தினர் உடனடியாக ஒசூர் மகளிர் காவல்நிலையத்தில் புகர் அளித்தனர்.   அதை ஒட்டி வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகலிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது,  வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி ராஜேஷ் சர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்குவதாகவும் அத்துடன் ரூ. 51,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்துள்ளார்.  குற்றவாளி அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்தும்,  ஆயுள் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

You may have missed