பெங்களூரு: கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டவர் கைது

பெங்களூரு:

2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி கர்நாடகா மாநிலம் பெஙகளூருவில் வீட்டு வாசலில் பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இது குறித்து எஸ்ஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரியில் நவீன்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கவுரியை துப்பாக்கியால் சுட்ட மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பரசுராம் வாக்மோரே (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.