ஆணுக்கு கர்ப்பப்பை : உதயப்பூரில் அதிசயம்

தயப்பூர்

ருபத்து இரண்டு வயதான ஒரு வாலிபரின் உடலிலிருந்து கர்ப்பப்பை, கருக்குழாய், மற்றும் கரு முட்டைகள் அறுவைச்சிகிச்சை செய்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

உதயப்பூரை சேர்ந்த 22 வயதான வாலிபர் ஒருவர், தனது விதைகள் உள்ளடங்கி இருப்பதால்  விதைப்பைக்குள் வரவில்லை என  சிகிச்சைக்கு வந்துள்ளார்.  அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஆண் – பெண் இருவருடைய இனப் பெருக்க உறுப்புகளும் உடலினுள் இருப்பதைக் கண்டு வியந்தனர்.

அந்த இளைஞரின் விருப்பத்துக்கிணங்க பெண்ணின் இனப் பெருக்க உறுப்புக்களான, கர்ப்பப்பை, கருக்குழாய் போன்றவை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது.  அவர் உடல் நிலை தேறி வருகிறார்.

இந்த அதிசய அறுவைச் சிகிச்சையை டாக்டர் ஷில்பா கோயல், மற்றும் மனீஷ் பட் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.  இதுவரை உலகில் இது போல 400 பேரைக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆனால் அறுவைச் சிகிச்சை செய்து  ஜனன உறுப்புக்களை நீக்குவது இதுவே முதல் முறை எனவும் ஷில்பா கூறினார்..  மேலும் பெண்ணின் உடலில் உறுப்புகளை நீக்குவது போல் அல்லாமல் ஆணின் உடலில்ருந்து நீக்குவது சவாலான ஒரு நிகழ்வு எனக் கூறினார்.

அந்த இளைஞருக்கு பரிசோதனையில் ஆண் மகனுக்குரிய உணர்வுகளும், ஆசைகளுமே இருப்பதாக தெரிய வந்துள்ளது.  அவர் விதைகள் பிறந்ததில் இருந்தே உள்ளடங்கி இருப்பது பெற்றோர்களுக்கு தெரியும் என்றும் அவர் திருமணம் செய்துக் கொள்ள விரும்பியதால் தற்போது சிகிச்சைக்கு வந்தார் எனவும் தெரிகிறது.

அவரது பெயர், மற்றும் எந்த விவரங்களையும் தெரிவிக்க டாக்டர்கள் மறுத்து விட்டார்கள்,