பொங்கலுக்கு ’மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர்….!

‘ஈஸ்வரன்’ படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிலம்பரசன்.

இதில் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இதுவரை ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டமாகப் படக்குழுவினர் ஏதேனும் வெளியிடுவார்கள் என்று சிலம்பரசனின் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது சிலம்பரசன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, ‘மாநாடு’ அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அதன்படி, “பொங்கல் அன்று ’மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டரும், சிம்புவின் பிறந்த நாளன்று டீஸரும் வெளியாகும்” என்று அறிவித்துள்ளார். சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3-வது வாரம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.