சீமான் முதல் காட்சி பதிவு செய்ய ; சேரன் டேக் சொல்ல சிம்பு நடிக்க இனிதே தொடங்கியது ‘மாநாடு’…!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் , வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’ .

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டராக ப்ரவீன் கே.எல், கலை இயக்குநராக சேகர் மற்றும் ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்‌ஷன் , பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

பின் எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சென்னையில் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு, அடுத்தகட்டமாக ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.3 ஷெட்டியூல்கள் திட்டமிடப்பட்டு, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பித்தது சீமான் முதல் காட்சியை பதிவு செய்ய சேரன் டேக் சொல்ல சிம்பு நடிக்க இனிதே தொடங்கியது மாநாடு படப்பிடிப்பு .