‘மாநாடு’ மே மாதம் முதல் தொடக்கம்” : வெங்கட்பிரபு

‘மாநாடு’ படப்பிடிப்பு மே மாதம் முதல் தொடங்கப்படும் என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன், எடிட்டராக ப்ரவீன் கே.எல் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்துக்காக தனது உடலை குறைத்துக்கொண்டு தம்பி குறளரசனின் திருமணத்துக்காக லண்டனில் இருந்து திரும்பியுள்ளார்.

சிம்புவுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அவர் திரும்பிவிட்டார். ‘மாநாடு’ மே மாதம் முதல் தொடக்கம்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு. இந்தப் பதிவு சிம்பு ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: manadu, Simbu, suresh kamatchi, venkat prabhu
-=-