மதுரை:

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது.

இதில்,  மானாமதுரை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனுவை தேர்தல் அலுவலர் நிராகரித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பல இடங்களில் ஏராளமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுஉள்ளனது.

மானா மதுரை தனித்தொகுதியில்  மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கலின் போது ஒரு படிவத்தில் கையெழுத்து இடாததால் ராமகிருஷ்ணன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 41 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது அதில் இன்று 25 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 16 வேட்பு மனுக்கள் ஏற்பு

கோவை பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட 30 வேட்பாளர்கள் 38 வேட்புமனுக்களை தாக்கல் செய்யதிருந்தனர். இதில் 23 வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது 15 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

நீலகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.அவரை முன்மொழிந்தவர்கள் முறையாக கையெழுத்து இடவில்லை என தெரிகிறது. நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் தியாகராஜன், திமுக சார்பில் ஆ.ராசா, நாம் தமிழர் கட்சி சார்பில் சே.மணிமேகலை உட்பட 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி, தமிழிசை இருவரின் வேட்பு மனுக்களையும் ஏற்பதில் சிக்கல் நீடித்த நிலையில், பின்னர் இருவரது மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.