இங்கிலாந்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்! 19 பேர் பலி!

மான்செஸ்டர்,

ங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இசை நிகழ்ச்சியின்போது நடைபெற்ற இந்த பயங்கர குண்டுவெடிப்பில், இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

பிரிட்டனின் பஞ்சாலைத்தொழில் நகரான மான்செஸ்டரில் அமெரிக்கப் பாடகரான அரியனா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு  20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர்.

அந்த அரங்கில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதியில் திடீரெனப் பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதன் காரணமாக அரங்கில் குழுமியிருந்த  இருந்த ரசிகர்கள் அலறியடித்து ஓடினர்.இதன் காரணமாக பயங்கர நெரிசல் ஏற்பட்டது.

இந்த கோர குண்டுவெடிப்பில் உடல் சிதறியும் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறியும் 19 பேர் உயிரிழந்ததாகவும், ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பிரிட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது கொடூர சம்பவம் பயங்கரவாதிகளின்  தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கும் எனவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.