பிரபல நடிகையும் உடற்பயிற்சி ஆர்வலுருமான மந்திரா பேடி கொரோனால முழு அடைப்புக்கு மத்தியில் தனது இன்ஸ்டாகிராமில் டி-ஷர்ட் சவால் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளார்.

தனது கால்களை சுவர் மீது வைத்து தனது டீசர்ட் மற்றும் கால் சட்டை அணியும் அவர், தனது முயற்சியைன தனது ரசிகர்களும் பின் தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-wDuVPANz9/

மேலும் தனது வீடியோவிற்கு அவர் தலைப்பிடுகையில்., “நான் டி-சர்ட் சேலஞ்சை எடுத்து வந்துள்ளேன். இதைச் செய்வதில் என் அசௌகரியத்தை நீங்கள் உணரலாம் மற்றும் அனுபவிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

கருப்பு நிற ஹால்டர் நெக் ஸபோர்ட்ஸ் ப்ரா மற்றும் ஒரு ஜோடி மினி ஷார்ட்ஸில் சட்டகத்துடன் வரும் மந்திரா சில சிரமங்களை எதிர்கொண்ட பிறகு அவர் மிகவும் கடினமான சவாலை வெற்றிகரமாக முடிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையவாசிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

https://www.instagram.com/p/B-q1lYLAD8C/

இரண்டு நாட்களுக்கு முன்பு, 12 நிமிட ஒர்க் அவுட் சர்க்யூட்டையும் பகிர்ந்துள்ளார். நிறைய பிரபலங்கள் இந்த சவாலை செய்து வருகின்றனர்,