‘#மண்டியிட்டமாங்கா…’ டிவிட்டரில் டிரென்டிங்காகும் பாமக கூட்டணி- வைரலாகும் அன்புமணி வீடியோ

மிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக பாஜக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பாமகவை விமர்சிக்கும் வகையில் டிவிட்டரில் மண்டியிட்ட மாங்கா என்ற ஹேஸ்டேக வைரலாகி வருகிறது.

அதுபோல ஏற்கனவே திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அன்பு மணி பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

பல ஆண்டுகளகாக அதிமுக அரசை கடுமையாக தாக்கி பேசி வந்த பாமக, சுய நலத்துக்காக தற்போது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது  என்று கடுமையாக  விமர்சிக்கப்பட்டு வருகிறது.

திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் இனிமேல் கூட்டணி கிடையாது என்றும், கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் கூட்டணி கிடையாது என்று வீராவேசமாக பேசிய வந்த பாமக இன்று அதிமுக காலடியில் விழுந்து கிடக்கிறது.

அதிமுக அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழல் பட்டியலை கவர்னரை சந்தித்து அளித்து,  பினாமி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று கூக்குரல் எழுப்பி வந்த இன்று பாமக, வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்ட மன்ற தேர்தலிலும் கூட்டணி கிடையாது…  கிடையாது… கிடையாது என்று ஆணித்தரமாக கூறுவதாக அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில்,  அதிமுக விடம் மண்டியிட்டது மக்களிடையே  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று வீராப்பாக பேசிய  ராமதாஸ், இன்று அதிமுகவிடம் கூட்டணிக்காக மண்டியிட்டது கடுமையான விமர்சனத்தை எழுப்பி உள்ளது. கேலிக்குள்ளாகியும் உள்ளது.

அதிமுகவுடன் பாமக அடிய பணிய காரணம் என்ன? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில்,  இதற்கு அன்புமணி மீதான வழக்கு காரணமா? மத்திய அரசின் மிரட்டலா? என பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன..

இந்த நிலையில் சமூக வலைதளமான டிவிட்டரில் #மண்டியிட்டமாங்கா என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

அதுதுபோல  கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிடக் கட்சி களுடன் கூட்டணி கிடையாது என்று அன்று கூறிய ராமதாஸ் இன்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பதை  கேலி செய்து பல மீம்களும் சமுக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

 கூட்டணி குறித்து ஏற்கனவே அன்புமணி பேசிய வீடியோ….

Leave a Reply

Your email address will not be published.