‘ராஜ வம்சம்’ படத்திலிருந்து மானே உன்னை எனும் சிங்கிள் டிராக் வெளியீடு…!

கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் – நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படம் ராஜ வம்சம் .

இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக தயாராகிறது.

இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டி.டி.ராஜா தனது தயாரிப்பு நிருவமான செந்தூர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்திலிருந்து மானே உன்னை எனும் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.