மேனகா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி

பிலிபித்,

த்திய அமைச்சர் மேனகா காந்தி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உ பியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் மேனகா காந்தி.  இவர் உ பி யில் உள்ள தனது பிலிபித் தொகுதிக்கு இன்று காலை சென்றார்.  அங்கு திடீரென ஏற்பட்ட உடல் நிலைக்குறைவு காரணமாக இன்று மதியம் அங்குள்ள அரசாங்க மருத்துவமனையின்  அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்

அவருக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் அனுமதிக்கப் பட்டதாகவும் முதலில் கூறப்பட்டது.  பின்பு அவருடைய பித்தப்பையில் உள்ள கற்களினால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் கூறப் பட்டது.  விரைவில் அவர் விமானம் மூலம் மேல்சிகிச்சைக்கு டில்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார் எனத் தெரிகிறது

அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட மேனகாவுக்கு இருதய நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கிறது.

மேனகா காந்தி மறைந்த இந்திராகாந்தியின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தியின் மனைவியும் பி ஜே பி யின் எம் பி யும் ஆவார்.

You may have missed