டில்லி:

சில வளர்ந்த நாடுகளை போல, மருத்துவ ரீதியான பயன்பாட்டிற்காக கஞ்சா போதை பொருளை சட்டரீதியாக அங்கீகரிக்கலாம் என மத்தியஅமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.

நாட்டில் போதை பொருள் தேவையை குறைக்க, ஒரு தேசிய கொள்கையை உருவாக்கும்படி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழுவிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். தேசிய கொள்கை தொடர்பாக உருவாக்கப்பட்ட வரைவு அறிக்கையை சமீபத்தில் இந்த குழு ஆய்வு செய்தது.

அதில், மத்திய அமைச்சர் மேனகா கூறுகையில், ‘‘அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மார்ஜுவனா எனப்படும் கஞ்சா போதை பொருள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், போதை பொருள் தவறாக பயன்படுத்தப்படுவது குறைந்துள்ளது.

இந்த நடைமுறையை இந்தியாவிலும் செயல்படுத்தி பார்க்கலாம். குறிப்பாக, மருத்துவ ரீதியான பயன்பாட்டிற்கு கஞ்சாவை அனுமதிக்கலாம். புற்றுநோய் சிகிச்சைக்கு அது அவசியம்’’ என்றார்.