டில்லி,

சுகாதாரமான நாப்கின்களுக்கு முழுவரி விலக்கு அளிக்கவேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் மேனகா காந்தி  மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு அவர் எழுதிய கடித த்தில், சுற்றுச்சூழலை கெடுக்காத, எளிதாக மக்கும் தன்மை கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் 100 சதவிதம் விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

லட்சக்கணக்கான பெண்களின் விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.