பொன்னியின் செல்வன் படத்திற்காக தாய்லாந்தில் லொகேஷன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மணிரத்னம்…!

https://twitter.com/ShamKaushal/status/1194579362089066496

தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , ஜெயராம் , அஸ்வின் ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது

படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் ‘நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இது தவிர வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவி, சுந்தர சோழனாக அமிதாப் பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் மற்றும் குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து 12 பாடல்கள் எழுதுகிறார்.

சமீபத்தில் சத்யராஜ் திடீரென்று விலகியிருப்பதாகக் கூறப்பட்டது. பழுவேட்டரையர் வேடத்துக்கு தேர்வான நடிகர் சத்யராஜ் படத்தில் இருந்து விலகி விட்டதால் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் அமலா பாலும் படத்திலிருந்து விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பிற்காக, லொகேஷன் தேர்வு செய்யும் வேலையில் மணிரத்தினம் இறங்கியுள்ளார். தாய்லாந்தில் மணிரத்தினம் படகில் செல்லும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவருடன் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஸ்டண்ட் மாஸ்டர் ஷாம் கவுஷல் ஆகியோரும் உடன் உள்ளனர் .

அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. மேலும் தொடர்ந்து 100 நாட்கள் தாய்லாந்தில் தங்கி ஷூட்டிங் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.