’பொன்னியின் செல்வன்’ செப்டம்பரில் மீண்டும் படப்பிடிப்பு? மணிரத்னம் திட்டம்.. விக்ரம் ஐஸ்வர்யாராய் வருகை

--

கொரோனா வைரஸ் ஊரடங்கால் எல்லா படங்களைப்போல் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்துவந்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டிருக் கிறது.

லாக் டவுன் முடிந்தவுடன் மீண்டும் பொன்னியன் செல்வன் படத்தின் முக்கிய காட்சிகளை புனே மற்றும் ஐதராபாத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் படமாக்க திட்டமிட்டபட்டிருப்பதாக தெரிகிறது.
“நடிகர் விக்ரம் சம்பந்தப்பட்ட பகுதிகளை செப்டம்பர் மாதம் படமாக்க மணிரத்னம் முடிவு செய்துள்ளார். ஆனால் லாக்டவுன் முடிவது எப்போது என்று தெரியாத நிலையில் படப்பிடிப்பு திட்டமிடல் எதுவும் இறுதி செய்யப்படவில்லை: என பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐஸ்வர்யா ராய் பச்சனும் இந்த ஷெட்யூலில் பங்கேற்க உள்ளாராம்.
ஆதித்யா கரிகலன் வேடத்தில் சியான் விக்ரம் நடிப்பார், எதிரியான நந்தினியின் பாத்திரத்தை ஐஸ்வர்யா ராய் எற்க உள்ளார்.
படப்பிடிப்பின்போது தீவிரமாக கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் எடுப்பதற்கான பணிகளை, படக்குழு மேற்கொண்டிருக்கிறது.
#

You may have missed