யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை : ‘பொன்னியின் செல்வன்’ ஷுட்டிங் 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது…

 

இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் ஆரம்பமானது.

90 நாட்கள் இடைவிடாது ஷுட்டிங் நடந்தது.

கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனால் இந்த படத்தில் நடிக்கும் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், மோகன்பாபு, பிரபு, விக்ரம் பிரபு, ஆகியோர் கால்ஷீட் வீணானது.

இந்த நிலையில் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பொன்னியின் செல்வன் படத்துக்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டது.

அங்கு நேற்று படப்பிடிப்பு ஆரம்பமானது.

படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியானதால், படப்பிடிப்பை தொடங்கினார், மணிரத்னம்.

இரட்டை வேடத்தில் இந்த படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் உள்ளிட்டோர் எப்போது இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை.

– பா. பாரதி

You may have missed