‘மணியம்மையின் தந்தை ஈ.வே.ரா.!’ தமிழக பாஜகவின் அநாகரிக டிவிட்… ! சர்ச்சை

சென்னை:

பெரியாரின் நினைவு தினமான இன்று, அவருக்கு புகழாரம் சூட்டுவதாக நினைத்து, பாஜக அவரை இழிவுபடுத்தி உள்ளது. இந்த டிவிட்  கடுமையான விமர்சனங்களை  ஏற்படுத்திய நிலையில், அந்த டிவிட்டை உடனே டெலிட் செய்துள்ளது….

தந்தை பெரியாரின் 46வது நினைவுதினம் இன்று தமிழகம் முழுவதும் திமுக, திராவிடர் கழக கட்சிகளால் அணுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையல், தமிழக பாரதிய ஜனதா கட்சியும், தனது டிவிட்டர் பக்கத்தில், ஈ.வே.ரா.வின் நினைவு தினம் குறித்து டிவிட் பதிவிட்டு உள்ளது.

அதில், மணியம்மையின் தந்தை ஈ.வே.ராமசாமியின் நினைவுதினமான இன்று,  குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத  சமூகத்தை உருவாக்க இன்று உறுதிக்கொள்வோம்’ என்று பதிவிட்டுள்ளது.

இந்த டிவிட் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வைரலானது. இதற்கு காரணம், அதில் பதியப்பட்டு உள்ள அநாகரிகமான வார்த்தை. ஈ.வே.ராவின் மனைவி மணியம்மை என்பதற்கு, மணியம்மையின் தந்தை,  ஈ.வே.ரா.. என்று இருந்தது….

இதைக்கண்ட சமூக வலைதளவாசிகள், தமிழக பாஜக தலைமையின் அறியாமையை கடுமையாக விமர்சித்தனர். பெரியார் குறித்து கிஞ்சித்தும் தெரியாத பாஜகவினர், பெரியார் கொள்கைகளை எதிர்த்து போராடுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து,  தனது டிவிட்டை தமிழக பாஜக உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து அகற்றி விட்டது.

இருந்தாலும், அதையும் விமர்சிக்கும் நெட்டின்கள், சங்கிகளுக்கு ஏன் இந்த பயம் என  கேள்வி எழுப்பி உள்ளனர்….