உலக டேபிள் டென்னிஸ் – 26வது இட வீராங்கனையை வீழ்த்திய 67வது இட வீராங்கனை!

புடாபெஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் மனிகா பத்ரா, உலகின் நம்பர்-26 வீராங்கனை சென்-சூ-யூவை ஐடிடிஎஃப் உலக டேபிள் டென்னிஸ் தொடரில் வீழ்த்தியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் மனிகா பத்ரா.

மனிகா பத்ரா, உலக ஐடிடிஎஃப் தரவரிசையில் 67வது இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் வயது 24. இவர் சென்-சூ-யூவை 4-3 (9-11, 4-11, 7-11, 12-10, 11-9, 11-7, 14-12) என்ற கணக்கில் தோற்கடித்தார்.

இவர், தனது அடுத்தப் போட்டியில் தரநிலையில் உலகின் நம்பர் – 11 இடத்திலுள்ள ஹரானோ மியூவை வெற்றிகொண்டால்தான் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும்.

ஆண்கள் பிரிவில், இந்தியாவின் முன்னணி வீரர் ஞானசேகரன் சத்யன், 4-0 என்ற கணக்கில், தரநிலையில் 61வது இடத்திலுள்ள நோஷத் அலாமியானை(ஈரான்) தோற்கடித்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.